கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் சேவை நலன் பாராட்டு விழாவும் இன்று(17) பாசிக்குடா மனோகர் தோட்டத்தில் இடம்பெற்றது.

 

இதன்போது மாகாண சமூக சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் புதிய நிருவாக சபைத் தெரிவும் இடம்பெற்றது.

 

அதன்படி தலைவராக ப.ராஜ்மோகன், செயலாளராக ஏ.ஜீ.அர்சாத், பொருளாளராக ஏ.அகமட் சபீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 

இந்நிகழ்வில் ஓய்வுபெற்றுச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியாரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

 

இந்நிகழ்வில் சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *