ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று(22) மாலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று மாலை தேர்திருவிழா ஆலய பிரதம குருக்கள் தலைமையில் முருக்கப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாட்டுடன் தமிழ் மொழியில் வேபரானயங்கள் ஓதப்பட்டு முருகப் பெருமான் சிறப்பு தேரில் அருள்பாளித்தார்.
மாலை 3 மணிக்கு தேர் திருவிழா ஆரம்பித்தது இதில் தேரின் வடம்பிடிக்க ஆண்கள் ஒருபகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க தேரோட்டம் இடம்பெற்றது.
இந்த தேரோடத்தின் போது இலங்கையில் முதல் முதலாக வசந்தி கௌதவம் இங்கு ஆடப்பட்டு வெளிவீதியில் நடனங்கள் ஆடப்பட்டு தோரோட்டம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆகம முறைப்பட அமைக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு பூஜைவழிபாடு செய்யும் ஒரேஒரு ஆலயம் மகா துறவி ஓங்காரந்த சரஸ்வதியபல் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக அருள்பாலித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.


