தரம் ஐந்து (2025) புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்ப வகுப்பு மாணவர்களின் அடைவு மட்டங்களை அளவிடும் மதிப்பீடாக இப்பரீட்சை உள்ளது.
இதனால், மாணவர்களிடையே பலத்த போட்டியையும் பெற்றோர்களிடையே பலத்த எதிர்பார்ப்புக்களையும் இப்பரீட்சை உருவாக்கியுள்ளது.
இந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த மாதம் இடம்பெற்றிருந்தது.
திட்டமிட்ட முறையில் இந்த வாரம் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டால், திணைக்களத்தின் இணையதளங்கள் ஊடாக http://www.doenets.lk www.results.exams.gov.lk பார்வையிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
