நோய்க்கு செலவு செய்ய பணமில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு நபர் தற்கொலை

பசறை, பெல்கஹதென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை, பெல்கஹதென்ன, கிரிகல, பகுதியை சேர்ந்த 76 வயுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளதாக பசறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பின்னர் உடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டின் ஜன்னலில் கயிற்றைக் கட்டி தொங்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டபோது, ​​குறித்த அறையில் உள்ள படுக்கையில் சந்தேக நபர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கடிதம் ஒன்றும் காணப்பட்டதாகவும் அதில் தனது நோய்களுக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக குறித்த கடிதத்தில் எழுதியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணைகளில் சந்தேக நபர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதபோது அவர் தூக்கில் தொங்கியதாகவும் தெரியவந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *