ஹட்டன் பொகவந்தலாவ, டின்சின் பகுதியில் இயங்கி வந்த மதுபானசாலை ஒன்று, மதுபான திணைக்கள அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டுள்ளது.
குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தொடர்பாக, கண்டி விசேட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சிவில் உடையில் குறித்த மதுபானசாலைக்கு சென்ற அதிகாரிகள் மதுபான போத்தல்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இதன்போது, அங்கு அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள் குறித்த மதுபானசாலையை முத்திரையிட்டுள்ளனர்.
அத்துடன், தண்டப்பணத்தை செலுத்தும் வரை குறித்த மதுபானசாலையினை திறக்க முடியாது எனவும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
