குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்டத்தில் இடம்பெற்று உள்ளது.

 

இரண்டு தினங்களுக்கு முன் விறகு சேகரிக்க சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டிற்கு தேவையான விறகு சேகரிக்க சென்ற வேளையில் சட்டி குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யபட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

இந்த மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உள்ளது.

 

உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக வைத்தியசாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *