உள்ளாட்சிசபை வாரத்தை முன்னிட்டு, பாத்தஹேவாஹேட்ட பிரதேச சபையின் ஏற்பாட்டில் சூற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஓர் அங்கமாக கலஹா இராமகிருஷ்ணா தேசிய கல்லூரி மாணவர்கள் உட்பட மேலும் சில பாடசாலைகளின் மாணவர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கலஹா பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாத்தஹேவாஹேட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


