வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பழைய கடைவீதி சந்தனலால் கருணாரத்ண மாவத்தை 500 மீற்றர் பாதையை புனர் நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.
இவ் வேலைத்திட்டம் பிரதி கல்வி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்வினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாநகர சபையில் முதல்வர் உபாலி வணிகசேகர, தேசிய மக்கள் சக்தி அரசின் நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நுவரெலியா கிளை பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

