மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

தேர்தல் திணைக்களத்தின் அனுமதியுடன் இன்று(30) மட்டக்களப்பு மாநகர சபையின் பணிகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக புதிய அரசாங்கத்தினால் சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மாநகர சபை புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்ஜெயன் தலைமையில் சபை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு சமய வழிபாடுகளின் பின் பிரதம அதிதியாக கலந்து கொண்டவர்களினால் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

 

இந் நிகழ்விற்கு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர்கள், பிரதேச செயலாளர், அரச உயர் அதிகாரிகள், சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *