கிளிநொச்சி இரத்தினபுரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

மே முதலாம் திகதியின் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவு உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்பை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாட்களில், போரின் இறுதிக்காலத்தில் முற்றுகைக்குள் ஆளாகியிருந்த தமிழ் மக்களின் ஒரேயொரு உயிர்காப்பு ஆகாரமாக விளங்கிய கஞ்சி முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

போர்க்காலத்தில் தமிழ் மக்கள் பட்ட வதைகளை நினைவிற்கொள்ளும் முகமாகவும், பட்ட வலிகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் விதமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு ஒரு குறியீடாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *