கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு மாணவர்களால் “போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வீதி நாடகம் நேற்று(15) மாலை 3.30மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு இல்ல முன்றலில், கிளிநொச்சி மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் மதீசன் தலைமையில் குறித்த விழிப்புணர்வு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.
மாணவர்களின் இயல்பான நடிப்பாற்றலில், மது பாவனையால் எமது பிரதேசங்களில் ஏற்படுகின்ற குடும்ப மற்றும் சமூக சீரழிவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந் நாடகம் அமைந்திருந்தது.
குறித்த வீதி நாடகத்தை கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு இல்ல உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர்.


