டித்வா பேரிடர் காரணமாக கடந்த 28.11.2025 அன்று ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமானது கடும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவமும் இலங்கை இராணுவமும் வீதி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து செயற்பட்டதனால் துரித கதியில் புனரமைப்பு பணிகள் இன்று(20) நிறைவு பெற்றது.
குறித்த பாலத்தினை புனரமைப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று பாலத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்துள்ளனர்.
இதன் போது இன்று இந்திய துணைத் தூதர் சாய் முரளி கலந்து கொண்டு குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
குறித்த பாலமானது எதிர்வரும் 21 அல்லது 22 திகதிகளுக்குள் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

