தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் முருகநாம பஜனை

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் முருகநாம பஜனை நிகழ்வு ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று(20) இடம்பெற்றது.

இதில் முருகன் அடியார்களினால் “முருகநாம பஜனை” நிகழ்த்தப்பட்டது. ஹார்மோனிய இசையின் இசைக்கலைமணி நடேசு செல்வச்சந்திரன்,  தபேலா இசையினை வித்துவான் மகேந்திரம் பிரபாவும்,  ஒக்ரபாட் இசையினை வித்துவான் கேதீஸ் ஆகியோரும்  வழங்கினர்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் மற்றும் அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *