2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம்

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.

 

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று(20) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *