மாவட்டச் செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் நிலவும் தற்போதைய அனர்த்த நிலைமையை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த கூட்டம் இன்று(22) பிற்பகல் 3.00 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

