முல்லைத்தீவில் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையின் கோரத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இன்று(26) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

 

இந்த அழியா நினைவில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபுபூர்வமாக அஞ்சலிகளை செலித்தினர்.

 

அவர்களது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

 

குறித்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *