கிளிநொச்சி பன்னங்கண்டியில் 131கிலோ 13 கிராம் கஞ்சா மீட்பு

கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பன்னங்கண்டி பகுதியில் பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டிருந்தது.

 

குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை நீதிமன்ற நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலைய  பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

 

39 வயதுடைய பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *