18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று(05) நடக்கும் 55ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று சன்ரைசர்ஸ் அணிக்கு 134 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

