பதியத்தலாவையில் பொலிஸ் சார்ஜன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அம்பாறை பதியத்தலாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவுரம் பொலிஸ் சார்ஜயன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று(06) பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பிபிலையைச் சேர்ந்த   பொலிஸ் சார்ஜயன் துனுகர முதியன்சேலாகே தனபால என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான இன்று காலை கடமையில் இருந்துள்ள நிலையில் அவரது ரி56 ரக துப்பாக்கியால் கழுத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

 

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பதியத்தலாவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *