மெட்டா மற்றும் யூடியூப் தளங்களின் உலகின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியா, இளைஞர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த உலகளாவிய விவாதத்தில் தற்போது இணைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவயாலு இந்த சட்ட மூலத்தை முன்மொழிந்துள்ளார்.
இந்தியக் குழந்தைகள் சமூக வலைத்தளங்களுக்கு மிக மோசமாக அடிமையாகி வருகின்றனர்.
உலகிலேயே வெளிநாட்டுத் தளங்களுக்குத் தரவுகளை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்தியப் பயனர்களின் தரவுகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் மேம்பட்ட ஏஐ அமைப்புகளை உருவாக்குகின்றன.
இந்தியர்கள் ஊதியம் இல்லாத தரவு வழங்குநர்களாக மாற்றப்படும் நிலையில், அதன் பொருளாதாரப் பலன்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன.
16 வயதுக்குட்பட்ட எவரும் சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என குறித்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் முழுப் பொறுப்பும் அந்தந்த சமூக வலைத்தள நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்படும்.
விதிகளை மீறிச் செயல்படும் 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகள் முடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

