இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 24 மணிநேர அவசரகால பதிலளிப்பு பிரிவு

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அவசரகால பதிலளிப்புப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.

குறித்த பிராந்தியத்தில் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்கள் வசித்து வருவதுடன் தொழில் புரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த புதிய பிரிவின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன், தற்போதைய பதற்றமான சூழலினால் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அவற்றுக்கும் இந்தப் பிரிவு தீர்வு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகால பதிலளிப்புப் பிரிவானது வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரமும் (24×7) தடையின்றி இயங்கும் என அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் பின்வரும் தொடர்பு இலக்கங்கள் மூலம் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்:

அவசரகால பதிலளிப்பு பிரிவு (வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு): +94 117 445 641 / +94 112 207 250
WhatsApp / Botim (செய்திகளுக்கு மட்டும்): +94 777 390 031
மின்னஞ்சல்: emergency.sl@mfa.gov.lk
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு: +94 742 595 546
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்: +94 719 802 822 அல்லது முழுநேர இலக்கமான 1989

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *