நேற்று(09) மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஷேன் பாலர் பாடசாலையில் அன்னையர் தினம் சிறப்பிக்கப்பட்டது.
முன்பள்ளியின் அதிபர் திருமதி. டிலினி குசாந்த் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி. அணுரேகா விவேகானந்தன் கலந்து கொண்டார்.
பிள்ளைகளின் அன்னையர் தின கலை நிகழ்ச்சிகளும், அன்னையர்களுக்கான வினோதஉடை நடைபவனியும், விளையாட்டுகள் என்பன சிறப்பாக நடைபெற்றன.
ஷேன் பாலகர்கள் தங்களது அன்னையர்களை கௌரவித்து வாழ்த்து மடல் வழங்கியது சிறப்பம்சமாகும்.
அதிதி திருமதி. அனு ரேகா விவேகானந்தன் அன்னையர்களுக்கு சிறப்புரை ஆற்றி முன்பள்ளியின் அதிபரினால் கௌரவிக்கப்பட்டார்.
இன்றைய அன்னையர் தின நிகழ்வில் அன்னையர்களும் பிள்ளைகளும் இணைந்து சந்தோஷமாக சகல செயல்பாடுகளிலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.





