இவ்வருடம் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற எண்ணியுள்ள கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்கள் குறித்த கடமையை எவ்வித பிரச்சனைகளும் இன்றி நிறைவேற்றும் வகையில் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
1. உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்கான காலப்பகுதி வெசாக் காலப்பகுதியோடு தொடர்பு படுவதனால் குறித்த கடமையினை எதிர்வரும் மே மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரம் மேற்கொள்ளுதல்.
ஏனைய நாட்களில் பிராணிகளை அறுப்பது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மாத்திரம் அதனை நிறைவேற்றி தேவையற்ற விமர்சனங்களையும் சட்ட ரீதியான பிரச்சனைகளையும் தவிர்த்துக் கொள்ளல்.
2.உழ்ஹிய்யா கடமைகளுக்கான பிராணிகளை மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட மடுவத்தில் உரிய கட்டணங்களை செலுத்தி அறுவை செய்வதன் மூலம் கழிவகற்றல் போன்ற பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
3. வீடுகளில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்கு விரும்பும் பொதுமக்கள் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதிக்கு முன்னர் மாநகர சபையில் உரிய கட்டணத்தைச் செலுத்தி அனுமதியைப் பெற்றுக் கொள்வதுடன் உரிய கழிவகற்றல் ஏற்பாடுகளையும் முறையாக ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.
4. வீடுகளில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வை செய்யப்படும்.
5. மேற்படி விடயங்களுக்கு அமைவாக செயற்படாத பொதுமக்கள் தேவையற்ற சட்ட பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படலாம்.
எனவே பொதுமக்கள் மேற்படி விடயங்களை கருத்திற் கொண்டு செற்படுமாறும் உரிய காலப்பகுதியில் உரிய அனுமதிகளைப் பெற்று உழ்ஹிய்யா கடமையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமூமாக நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் கேட்டுக் கொள்கின்றார்.

