வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்கள் சந்திப்பு

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றது.

 

குறித்த சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கடல் தொழில் அமைச்சர் சந்திர சேகர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

குறித்த கலந்துரையாடலில் பெண்கள் விவகார அமைச்சரால் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்ட விசேட நிவாரணம் மற்றும் கடன் வசதி பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

 

மற்றும் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களின் சிறுவர்களை பாதுகாக்க அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட கொண்டு வரப்பட்ட 10000 ரூபா திட்டம் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.

 

அதனை தொடர்ந்து எழுதுமட்டுவாழ் பெண்களுக்கான பயிற்சி நிலையமும் அமைச்சர் திறந்து வைக்கப்பட்டது.

 

குறித்த சந்திப்பில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பெண்கள் சுயதொழிலில் எவ்வாறு முன்னேறுவது தொடர்பாக கலந்துரையாடபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *