அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த பாடசாலை ஊடக கழக பொறுப்பாசிரியர்கள் மற்றும் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 76 ஆசிரியர்கள் இந்நாள் முழுவதும் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி.ஏ. சரத்சந்திர மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. என். கமலதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதான விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரகுராம் கலந்து கொண்டார்.
சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்பங்களை ஊடகப் பணிகளில் பயன்படுத்தும் முறைகள், பாடசாலை ஊடக அலகுகளை நிறுவுவதன் நோக்கங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஊடக ஒழுக்கநெறிகள் ஆகிய விடயங்கள் இச் செயலமர்வில் கலந்துரையாடப்பட்டன.

