தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தி2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு செயல்படுத்தப்படும் ‘தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய வீடு அமைப்பதற்காக 35 குடும்பத்திற்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்கு வீடுகள் பயனாளிகளிடம் தேசிய வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் இன்று(16) பயனாளிகளிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், கிளீன் சிறிலங்கா மாவட்ட பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பிரதி பணிப்பாளர் மற்றும் நான்கு பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

