கிளிநொச்சி மாவட்டத்தின் போக்குவரத்து வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சுகளின் உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்தின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துதல், பொதுமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

