ஏழாலை பெரியதம்பிரான் ஆலயக் குளக்கரை மற்றும் வாய்க்கால்களில் சிரமதானம்

யாழ்ப்பாணம் ஏழாலை மத்தியில் அமைந்துள்ள பெரியதம்பிரான் ஆலயக் குளத்தை தூர்வாரும் பணிகளின் முதற்கட்டமாக, குளக்கரை மற்றும் வாய்க்கால்களில் காணப்பட்ட பற்றைகள் மற்றும் குப்பைகளை அகற்றும் சிரமதானப் பணி நேற்று (20) முன்னெடுக்கப்பட்டது.

 

வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் வட்டமும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் கிராம மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலய அறங்காவலர்கள், கமக்காரர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும், குளத்தை தூர்வாரும் எதிர்கால நடவடிக்கைகளில் கிராம மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *