காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இன்று(14) காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் பலரின் உரைகளும் இடம்பெற்றன. நிறைவாக அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *