முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வதிவிடப் பயிற்சிநெறி

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வதிவிடப் பயிற்சி நெறி (23, 24) மட்டக்களப்பு மியானி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

 

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் செல்வி சாஜா வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தை சேர்ந்த வளவாளர்கள், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இருநாள் பயிற்சியின் போது, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பங்களுக்கு எவ்வகையான சேவைகளை பெற்றுக்கொடுத்தல், சம்பவ மாநாடு மற்றும் சமூக பராமரிப்பு திட்டம் தயாரித்தல் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *