இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசாங்கத்தின் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

நீண்டகாலமாக சேதமடைந்திருந்த இவ்வீதியின் புனரமைப்பின் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன், கிளீன் ஸ்ரீலங்கா – கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், உள்ளூராட்சி பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *