வாகனேரியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு – வேலி அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலில் 60 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றதையடுத்து ‘இனியும் உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன் யானை – மனித மோதலை தடுக்க உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;.

வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய  ஞானமுத்து மனோகரன்   என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த நபர் சம்பவ தினமான இன்று காலையில் வீட்டில் இருந்து வயல் வேலைக்கு சென்றிருந்த போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை  பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்

இதனிடையே தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமந்த போக்குடன் செயல்படுவதாக குற்றம் சாட்டி பிரதேச மக்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒன்று கூடி இன்னொரு உயிரை இழக்க நாங்கள் தயாரில்லை எனவே உடன் தீர்வை பெற்றுத் தரவும்.

எமது மக்களின் உயிரை துச்சமாக எண்ணுகின்ற அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் யானை வேலியே தீர்வு இதுவரை எடுக்கவில்லை, காலம்தோறும் மக்களின் உயிரை காவு கொள்ளும் காட்டுயானை, அதிகாரிகளின்; கவனத்திற்கு எமது வாகனேரி கிராமத்துக்கான யானை வேலியை உடனடியாக அமைத்துர வேண்டும் என சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம்  ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *