மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டம் 1 (எச்சரிக்கை) மற்றும் கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:
-
காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
-
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
-
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
-
மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
-
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
-
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
-
களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள
கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:
-
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
-
களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
-
கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
-
மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
-
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
-
காலி மாவட்டம்: தவலம
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

