ரூ. 4 கோடி செலவில் ஆத்துக்கட்டு பாலத்தின் அடித்தளம் பூர்த்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் மற்றும் பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகளை ஊடகவியலாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த இப்பாலத்தின் அடித்தள நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது.

பாலத்தின் தற்காலிக அமைப்புக்கு இந்திய அரசாங்கம் உதவியளித்த நிலையில், அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அடித்தளப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து பாலம் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடைகள் நீங்கி, அப்பகுதி மக்கள் நன்மையடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *