சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல்சார் எல்லைக்கோட்டை (IMBL) மீறி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 9 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது, இலங்கை கடற்படையின் ‘சமுதுர’ கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்த இந்தியப் படகுகளில் ஒன்றும் அதிலிருந்த 9 மீனவர்களும் கைப்பற்றப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *