பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று (04) அம்பலாங்கொடை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 48 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ள காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
