வெடிபொருட்களை மறைத்து வைத்த இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

2019 ஆம் ஆண்டு புத்தளம் வனாத்தவில்லு, லக்டோஸ் தோட்டப் பகுதியில் உள்ள காணியொன்றில் வெடிபொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைத்தமை தொடர்பான வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இரு பிரதிவாதிகளுக்கும் கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றம் தலா 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுகளைப் பிரதிவாதிகள் இருவரும் ஒப்புக்கொண்டதையடுத்து, லால் பண்டார, நயோமி விக்ரமசேகர மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்தத் தண்டனையை அறிவித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *