அந்த வீடியோவில் ரசிகர்களிடம் பேசிய அஜித்குமார், தங்களது அணிக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரைப்படங்களில் நடிப்பதுடன், கார் பந்தயத்திலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் அவர், சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் தனது அணியுடன் பங்கேற்று வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி பங்கேற்றது. அங்கு நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், அஜித்குமாரின் அணி அடுத்ததாக போர்த்துக்கலில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் தனது அணி பங்கேற்க இருப்பதாக அஜித்குமார் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்களிடம் பேசிய அஜித்குமார், தங்களது அணிக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே, அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக ‘டேர் டெவில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இது அவரது 64 ஆவது திரைப்படமாகும். ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

