நாட்டின் தவறுகளையும் சரியான முடிவுகளையும் விமர்சன ரீதியாக ஆராய வேண்டும் – சஜித் பிரேமதாச!

‘Tear Drop Nation’ திரைப்படம் மூலம் நாட்டின் கடந்தகாலத் தவறுகளையும் சரியான செயற்பாடுகளையும் புரிந்துகொண்டு, விமர்சன மற்றும் சுயவிமர்சன ரீதியில் அவற்றை ஆராய்ந்து, கற்றுக்கொள்ளும் பாடங்களின் அடிப்படையில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சரா கபீர் தயாரித்த ‘Tear Drop Nation’ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், திரைப்படத்தின் தயாரிப்பாளர் சரா கபீர் தனது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை ஒதுக்கிவைத்து, பாரபட்சமின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் தனது கலைப்படைப்பை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இத்திரைப்படம் எடுத்துரைக்கும் பாடங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் ஒட்டுமொத்த மக்களின் சுபீட்சத்திற்காகவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *