அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவோம் என்று ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மீண்டும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை தொடங்கினால், அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கில் அதன் நட்பு நாடுகளுக்கும், பெருத்த சேதம் ஏற்படுத்துவோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் நாட்டை வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் நிலவியது.

நீண்ட மோதலுக்கு பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட போதிலும் அவ்வப்போது அமெரிக்காவும், ஈரான் நாடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அணு ஆயுதத்துடன் தொடர்பு உள்ளது என்று கூறி, 2007-ல் ஐ.நா.அமைப்பு தடை விதித்த மெஹர்தாத் அக்லாகி ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதிவியேற்றுள்ளார்.

மேலும், 42 ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய போதிலும், அவர் இதற்கு முன் இராணுவ பதவி எதனையும் வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *