மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த சனிக்கிழமை (17.10.2026) நவராத்திரி பூஜை நிகழ்வு பக்திபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சரஸ்வதி, இலட்சுமி மற்றும் துர்க்கை அம்மன் ஆகிய முப்பெரும் தேவியருக்கும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

நவராத்திரி விழாவின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இவ்வழிபாட்டில், கல்வி, கலை, அறிவு மற்றும் ஞானத்தின் அருளைப் பெற்றிட சரஸ்வதி அம்மனையும், செல்வம் மற்றும் செழிப்பைப் பெற்றிட இலட்சுமி அம்மனையும், வலிமை மற்றும் பாதுகாப்பைப் பெற்றிட துர்க்கை அம்மனையும் பக்தர்கள் வழிபட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நாட்டின் சுபீட்சம், மக்களின் நலன் மற்றும் அரச அலுவலகப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகவும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வு இந்து சமயப் பாரம்பரியங்களையும் கலாசார விழுமியங்களையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைந்ததுடன், உத்தியோகத்தர்களிடையே ஆன்மீக உணர்வையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் நிகழ்வாகவும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *