ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு 30 நாட்கள் விளையாடத் தடை விதித்துள்ளதுடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மாற்று வீரராக அமர வைக்கப்பட்டார். போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்த்து அவர் பயிற்சியில் ஈடுபட்டபோதும், இறுதியில் களமிறக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், டென்மார்க் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக கோபன்ஹேகனில் இருந்த போர்த்துக்கல் அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கி விசாரணை நடத்தியது.

தேசிய அணியின் முகாமிலிருந்து வெளியேறியது விதிமீறல் எனக் கருதப்பட்டதால், ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது செயலுக்காக இரசிகர்களிடமும் அணியின் சக வீரர்களிடமும் ரொனால்டோ மன்னிப்புக் கோரியிருந்தார். மேலும், தனக்கு விதிக்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ரொனால்டோ மீண்டும் போர்த்துக்கல் அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே கூட்டமைப்பின் விருப்பமாக உள்ளது.

மேலும், போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ ப்ரோயென்சா, ரொனால்டோ மீண்டும் அணியில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *