சாமர சம்பத்துக்கு பிணை மறுப்பு – தொடரும் விளக்கமறியல்!

இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்த பிணை விண்ணப்பங்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதன்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்டு, கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *