ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: 1,500 மீற்றர் ஓட்டத்தில் இலங்கைக்கு தங்கம்!

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், இலங்கைக்கு இன்று(23) தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் ரி46 பிரிவில் இலங்கையின் பிரதீப் சோமசிறி இன்று (23) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், பிலிப்பைன்ஸ் வீரர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான திறமையையும் போட்டித் திறனையும் வெளிப்படுத்திய அவர், முதலிடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *