அக்கரைப்பற்று ஆசிரியைக்கு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் வாய்ப்பு!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கோளாவிலைச் சேர்ந்த திருமதி சந்திரிக்கா குமுததாஸ் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் கர்நாடக சங்கீதத் துறையில் பட்டம் பெற்ற இவர், முதலாம் வகுப்பில் சித்தியடைந்து சிறப்புத் தகைமையையும் பெற்றுள்ளார்.

 

2017ஆம் ஆண்டு சங்கீதப் பாட ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், அலிக்கம்பை புனித சவேரியார் வித்தியாலயத்தில் பணியாற்றியதுடன், தற்போது கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

ஆரம்பக் கல்வியை கோளாவில் விநாயகர் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்திலும் பயின்ற இவர், கல்வி மற்றும் இசைத்துறையில் சிறந்த அடைவுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *