மேசைப் பலகைகளுக்குள் ரூ.15.8 கோடி போதைப்பொருள் – ஒருவர் கைது!

தாய்லாந்திலிருந்து அன்பளிப்புப் பொதியாக அனுப்பப்பட்ட மேசைப் பாகங்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட ரூ.15.8 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மேசைப் பலகைகளின் உட்பகுதியில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் தொடர்பாக ராகமையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இத்தகவலை சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *