உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நடைபவனி 28.10.2026 நேற்று ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலை முன்றலில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி 10.30 மணியளவில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி , அலுவலக உத்தியோகத்தர்கள், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பிராந்திய வைத்தியர்கள், மட்டக்களப்பு புற்றுநோய் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்வியற்கல்வி பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கினர்,
அத்துடன் மார்பக புற்றுநோய் தொடர்பான வீதி நாடகங்களும் கோசங்களும் பதாதைகளும் ஏந்திய வண்ணமாக இந்நிகழ்வு இடம்பெற்றது

