கிளிநொச்சி, திருநகர் பகுதியில் தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, கயஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், தகவலறிந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

