2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) இலங்கையிலிருந்து பயணமாகியுள்ளார்.
அன்டிகுவா மற்றும் பர்புடாவின் செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள குறித்த மாநாடு இன்று முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
- இந்த விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ள பிரதமர், உறுப்பு நாடுகளுக்கிடையிலான பொதுநலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.

