410 பேர் கைது, 23 பேர் குற்றங்களுடன் நேரடித் தொடர்பு!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் மூலம் 23 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடு தழுவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பிரிவு மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, நேற்றைய (04) தரவுகளின்படி 26,868 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் சந்தேகத்தின் பேரில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 410, குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 23, கைது செய்யப்பட்டுள்ள பிடியாணை (Open Warrants) பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 258, கைது செய்யப்பட்டுள்ள திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை183, மதுபோதையில் வாகனம் செலுத்திய வேளையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 280, கவனயீனமாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 135, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் 4,463

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *